Vino's கருத்துகள்

You're blesssed if someone listens to your words quietly.

Maiyazhagan - 'Arulmozhi'

மெய்யழகன் இல் அருள்மொழி கதாபாத்திரம், என்னையே ஒருவர் படம் பிடித்து காட்டுவது போல் இருந்தது. அப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் என்னுள் ஒற்று போனது. இப்பொழுது எங்களுக்கும் சரியாக அதே 22 வருடம் ஆகிறது. 1. சொந்த ஊரை விட்டு 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் வெளியேறுவது. 2. பெரியப்பா, மாமா வழியனுப்பி வைப்பது. 3. லாரியில் அமர்ந்து பயணம். 4. சொந்த ஊர் செல்ல அழைப்பு வந்ததும் செல்வோமா வேண்டாமா என்ற தயக்கம். 5. என் அண்ணன் திருமணத்திற்கு நானும் என் தங்கையும் சென்றது. 6. தஞ்சாவூர் - நீடாமங்கலம் = சேலம் - ஆத்தூர். 7. எங்கள் ஊர் ரயில் நிலையத்தை ரசித்து பார்த்தது. 8. பல வருடங்கள் கழித்து பார்க்கும் எங்கள் உறவினர்கள் என்ன சொல்வார்கள், என்ன கேட்பார்கள் என்ற தயக்கம் தொண்டை வரை நின்றது. 9. நடத்துநர் சொன்னது போல், ஊர் எங்களுக்கு புதிது அல்ல. அந்த நாள் எங்களுக்கு புதிதாக தோன்றியது. 10. எங்கள் அப்பாவிடம் பேச வேண்டுமென பல உறவுகள் அப்பாவின் phone number கேட்டது மற்றும் பேசியது. 10. பல சொந்தங்கள் பெயர்கள்/உறவுமுறை யோசித்து பார்த்து பேசியது. அவர்களுக்கு நாங்கள் இன்னானரின் மகள்கள் என்று தெரிந்து நலம் விசாரித்தபோது எங்களுக்குத்தான் பலரை நினைவு கூற இயலவில்லை. 11. அண்ணன் - தங்கை உறவு. நாங்கள் இரு பெண் பிள்ளைகள் எங்களுக்கும் அதே போல் எங்களது பெரியப்பா மகன்கள்தான் இன்றுவரை எங்களுக்காக அனைத்துக்கும் உடன் நிற்பது. அவர்களுக்கு எங்களது நன்றிகள் எப்பொழுதும். (எனது ஒரு அண்ணன் அதேபோல் நீயும் தங்கையும் என் திருமணத்திற்கு கட்டாயம் வரவேண்டுமென கட்டளை இட்டார்) 12. எங்களது பூர்வீக நிலத்தை (7 தலைமுறையாக) நான் இன்றுவரை சில மயில் தொலைவில் நின்று பார்த்து வருகிறேன். பக்கம் போய் பார்க்கும் வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை. 13. எனது சைக்கிளை எனது அக்கா மகளுக்கு அனுப்பியது. 14. வீட்டின் பெரிய பிள்ளையென்று எங்கள் வீட்டின் சிறு வாண்டுகளை பார்த்துக்க சொல்வார்கள். 15. இன்றுவரை என்னைவிட வயதுக்கு சிறிய உறவுகள் 'அக்கா உங்களை பார்த்து இதை செய்தேன், அதை செய்தேன்' என சொல்லும்பொழுது எனக்கு அது பெரிதாக தெரிந்ததில்லை. இன்று அதை உணர்கிறேன். 16. என் வாழ்வில் ஒரு மெய்யழகன் இல்லை பலர் உண்டு. இந்த படத்தை பார்க்கும்படி ticket book செய்து கொடுத்ததும் ஒரு மெய்யழகன்தான். மிக்க நன்றி. இப்படத்தை பார்த்து கனத்த மனதுடன் வெளியே வந்தேன். ஆனால் இப்பொழுது புரிகிறது இதே கனத்த மனதுடன் பல லட்சம் மக்கள் உண்டு என்று. நன்றி திரு. C. பிரேம் குமார், இயக்குனர்.

Read more